சென்னையில் ”பஸ் டே” என்ற பெயரில் மாணவர்கள் ரகளை – பதறவைக்கும் கீழே விழும் காட்சி

496

கல்லூரி தொடங்கிய முதல் நாளிலேயே பல கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் தடையை மீறி “பஸ் டே” கொண்டாடத்தில் ஈடுபட்டதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

போலீசார் மற்றும் கல்லூரிகளின் தடைகளை மீறி மாணவர்கள் பேருந்தின் மேற்கூரை மீது ஏறி ரகளையில் ஈடுபட்டுதால் பரபரப்பு ஏற்பட்டது. பச்சையப்பன், நந்தனம், நியூ கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் இந்த அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பேருந்தின் மேற்கூரை மீது நின்றிருந்த போது, ஓட்டுநர் திடீரென பிரேக் அடித்தால், மாணவர்கள் கீழே விழுந்து காயமடைந்தனர்.

இருப்பினும் அதனை பொருட்படுத்தாத மாணவர்கள் தொடர்ந்து பேருந்தில் அட்டகாசம் செய்தபடி பயணம் மேற்கொண்டனர். இதனிடையே பேருந்தின் மேற்கூரை மீது ஏறி ரகளையில் ஈடுபட்டது தொடர்பாக 17 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of