டெல்லியை வீழ்த்தி சென்னை அசத்தல் வெற்றி.., நான் தயார்.., மும்பை தயாரா?

580

அனல் பறக்கும் ஐபிஎல் போட்டியில் 2 வது குவாலிபயர் போட்டியில் தல தோனி தலைமையிலான சென்னை அணியும் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி அணியும் விசாகப்பட்டினத்தில் மோதினர்.

இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய டெல்லி அணி சென்னை அணியின் சுழலையும், சூராவளியையும் தாக்கு பிடிக்க முடியாமல் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை எடுத்துள்ளது.

இதில் அதிகபட்சமாக ரிஷாப் பான்ட் 38 ரன்களும், காலின் மன்ரோ 27ரன்களும் சேர்ந்தனர்.சென்னை அணியில் சிறப்பாக பந்து வீசிய தீபக் சாஹர், ஹர்பஜன்சிங், ரவீந்திர ஜடேஜா, பிராவோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், இம்ரான் தாஹிர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 148 ரன்கள் மட்டுமே வெற்றி இலக்கு என களமிறங்கிய சென்னை அணி ஆரம்பம் முதலே நிதானத்தையும், அதிரடியையும் ஒரு சேர காட்டத்தொடங்கினர். இதில் டு பிளிசிஸ் 50, வாட்சன் 50 தங்களின் அரை சதத்தை பதிவு செய்து வெளியேறினர்.

பின்பு வந்த ரைனாவும் 11 சொர்ப்ப ரன்களில் வெளியேறினார், இவரைத்தொடர்ந்து களமிறங்கிய தல தோனி ஆரம்பம் முதலே அதிரடியை காட்டி ராயுடுக்கு துணையாக நின்று அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச்சென்றனர்.இதனைத்தொடர்ந்து ஐதராபாத்தில் சென்னை அணி மீண்டும் மும்பை அணியை இறுதிப்போட்டியில் சந்திக்க உள்ளது இந்தாண்டு ஐபிஎல் தொடரில் மும்பையிடம் வாங்கிய அடியை திருப்பி கொடுத்தாக வேண்டும் என சென்னை அணி தீவிரமாக உள்ளது.

இதனால் இறுதிப்போட்டி கூடுதல் பரபரப்பு மட்டுமின்றி ரன் வேட்டை மற்றும் விக்கெட் வேட்டைகளுக்கு பஞ்சம் இருக்காது. ஞாயிறு ஐபிஎல் இறுதிப்போட்டி ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக இருக்கும்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of