வாங்கியதை திருப்பி கொடுக்குமா சென்னை.., இன்று மும்பையின் நிலை என்ன? அனல் பறக்கும் போட்டி

241

அனல் பறக்கும் ஐபிஎல் தொடரின் லீக் சுற்று இறுதிகட்டத்தை நெருங்கிங்கொண்டு இருக்கும் நிலையில, முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே- ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

இன்னும் சில லீக் ஆட்டங்களே அனைத்து அணிகளுக்கும் எஞ்சியுள்ளது. ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டும் இதுவரை பிளே- ஆப் சுற்றை உறுதி செய்துள்ளது.

இந்த ஐபிஎல் திருவிழாவில் இன்று இரவு 8 மணிக்கு 44 வது லீக் ஆட்டத்தில் நடப்பு சேம்பியன் தல தோனி தலைமையிலான சென்னை அணியும், ரோகித் தலைமையில் மும்பை அணியும் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் பல பரிட்சை மேற்கொள்கின்றனர்.

சென்னை அணி இதுவரை 11 ஆட்டங்களில் விளையாடி 8 வெற்றி, 3 தோல்வி என்று 16 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர். புள்ளி பட்டியலில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு இறுதிப்போட்டிக்கு முன்னேற இரண்டு வாய்ப்பு கிடைக்கும் என்பதால் ‘நம்பர் ஒன்’ இடத்தை வலுப்படுத்துவதில் சென்னை அணி தீவிரம் காட்டி வருகிறது.

தொடக்க வரிசை வீரர்களின் பேட்டிங் தான் சென்னை அணிக்கு கவலைக்குரியதாக இருந்தது. அந்த குறையை போக்கிய ஷேன் வாட்சன் முந்தைய ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் 96 ரன்கள் விளாசி அசத்தினார். கேப்டன் டோனி, ரெய்னா, அம்பத்தி ராயுடு ஆகியோரும் பார்மில் இருப்பது சென்னை அணிக்கு உற்சாகம் தருகிறது. பந்து வீச்சில் தீபக் சாஹர், இம்ரான் தாஹிர், ஹர்பஜன்சிங் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

அது மட்டுமின்றி உள்ளூரில் ஆடுவது சென்னை அணிக்கு கூடுதல் உத்வேகம் அளிக்கக்கூடிய விஷயமாகும். இந்த சீசனில் இங்கு நடந்த 5 ஆட்டங்களிலும் வெற்றி கண்டுள்ள சென்னை அணி, உள்ளூரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணி என்ற பெருமையோடு பயணிக்கிறது. ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணியிடம் அவர்களது இடத்தில் 37 ரன்கள் வித்தியாசத்தில் அடைந்த தோல்விக்கு சென்னை அணி வஞ்சம் தீர்த்துக் கொள்ளுமா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of