‘தல’ தோனியின் அதிரடி.., ராஜஸ்தானை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்திய சென்னை

732

கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிரடியை மட்டும் விருந்தாக வைக்கும் அனல் பறக்கும் ஐபிஎல் தொடரின் 25 வது லீக் ஆட்டத்தில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட நடப்பு சாம்பியன் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் பல பரிட்சை மேற்கொள்கின்றனர்.

இதற்கான டாஸ் சுண்டப்பட்டது, இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. பின்பு பேட்டிங் செய்யத்தொடங்கிய ராஜஸ்தான் அணியின் அதிரடி தொடக்க வீரர்களான அஜிங்கியா ரகானே, ஜோஸ் பட்லர் ஆரம்பம் முதலே சென்னை அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் தடுமாற்றத்துடன் விளையாடத்தொடங்கினர்.ராஜஸ்தான் அணியின் தடுமாற்றத்தை பயன்படுத்திக்கொண்ட சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள் மலமலவென விக்கெட்டுகளை குவிக்கத்தொடங்கினர். இதில் ரகானே 14 ரன்னிலும், ஜோஸ் பட்லர் 23 ரன்னிலும், சஞ்சு சாம்சன் 6 ரன்னிலும், ராகுல் திரிபாதி 10 ரன்னிலும், ஸ்டீவன் ஸ்மித் 15 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

அப்போது ராஜஸ்தான் அணியின் எண்ணிக்கை 5 விக்கெட்டுக்கு 78 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அடுத்து இறங்கிய பென் ஸ்டோக்ஸ் சிற்டிது தாக்குப்பிடித்தார். அவரும் 28 ரன்னில் அவுட்டானார். ரியான் பராக் 16 ரன்னில் வெளியேறினார்.கடைசி ஓவரில் 18 ரன்கள் அடித்தனர். இறுதியில், ராஜஸ்தான் அணி கொடுக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.சென்னை அணி சார்பில் தீபக் சஹார், ஷர்துல் தாக்குர், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்பு களமிறங்கிய சென்னை அணி 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு விளையாடத்தொடங்கினர். சென்னை அணியின் அதிரடி தொடக்க வீரர்களான வாட்சன், டு பிளிசிஸ் தங்களின் நிதானமான ஆட்டத்தை தொடங்கினர்.

இருப்பினும் ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் டெக்கவுட் ஆனார். பின் வந்த சுரேஷ் ரைனாவும் வந்த வேகத்தில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அவரைத்தொடர்ந்து வந்த ஜாதவும் சொர்ப்ப ரன்களில் வெளியேறினார்.பின்பு தல தோனியும், ராயுடும் இணைந்து அதிரடியையும், நிதானத்தையும் ஒரு சேர வெளிபடுத்து இருவரும் அணிக்குத்தேவையான ரன்களை சேர்க்கத்தொடங்கினர். அதுமட்டுமின்றி, தங்களுடைய அரை சதத்தையும் இருவரும் பதிவு செய்தனர்.

தல தோனி தேவைப்படும் இடத்தில் அதிரடியையும், மற்ற இடத்தில் நிதானமான ஆட்டத்தை வெளிபடுத்தினார். இருப்பினும் ராயுடு 57 ரன்களில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். ஆனால் தல தோனி களத்தில் இருந்து ரன்களை சேர்த்துக்கொண்டு இருந்தார்.

இவரும் கடைசி ஓவரில் போல்ட் ஆகி வெளியேறினார். இந்நிலையில் 3 பந்துகளுக்கு 8 ரன்கள் தேவைப்பட்டது. சாட்னர் அடுத்த 2 பந்துகளில் 4 ரன்கள் அடித்தார். இதையடுத்து உதிரிகள் மூலம் 1 ரன் வர கடைசி பந்துக்கு 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சாட்னர் சிக்ஸ் அடித்து சென்னை அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.இதன் மூலம் சென்னை அணி தனது ரசிகர்களுக்கு மட்டுமின்றி, ராஜஸ்தான் அணி ரசிகர்களையும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்து இறுதி ஓவரில் த்ரில் வெற்றியை தன்வசமாக்கியது.

இந்தாண்டு ஐபிஎல் போட்டியில் இதுவரை நடந்த 7 போட்டிகளில் 6 வெற்றியையும், ஒரே தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது. சென்னை அணிக்கு அடுத்த போட்டி கொல்கத்தா அணியுடன். இவர்கள் தோற்றதுக்கு பழிவாங்கும் முனைப்பில் இருப்பதால் அடுத்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய ஆட்டத்தில் தல தோனிக்கு நட்சத்திர ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of