‘தொட்டா சும்பா விடுவோமா’.., ஐதராபாத்துக்கு பதிலடி கொடுத்த சென்னை.., அசத்தல் வெற்றி

478

அனல் பறக்கும் ஐபிஎல் தொடரின் 41 வது லீக் ஆட்டத்தில் முன்னாள் நடப்பு சேம்பியன் தல தோனி தலைமையிலான சென்னை அணியும், புவனேஷ்வர் தலைமையில் ஐதராபாத் அணியும் சென்னையில் பல பரிட்சை மேற்கொண்டனர்.

இதற்காக டாஸ் சுண்டப்பட்டது இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். பின்பு களமிறங்கிய ஐதராபாத் அணியின் தொடக்க அதிரடி வீரர்களான டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் முதலில் நிதானமான ஆட்டத்தை வெளிபடுத்தினர்.அணியின் எண்ணிக்கை 5 ஆக இருக்கும்போது பேர்ஸ்டோவ் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேற்றினர். அடுத்து இறங்கிய மணீஷ் பாண்டே பொறுப்புடன் விளையாடினார்.

வார்னரும், பாண்டேவும் இணைந்து 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் சேர்த்தனர். இருவரும் அரை சதம் கடந்தனர். ஐதராபாத் அணி 120 ரன் எடுத்தபோது வார்னர் 57 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அவரை தொடர்ந்து விஜய் சங்கர் இறங்கினார். மறுபுறம் மணீஷ் பாண்டே அதிரடியை காட்ட. அணியின் எண்ணிக்கை 167 ஆக உயரத்தொடங்கியது அப்போது விஜய் சங்கர் 26 ரன்னில் ஆட்டமிழந்தார்.இறுதியில், ஐதராபாத் அணி கொடுக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 175 ரன்களை எடுத்துள்ளது. மணீஷ் பாண்டே இறுதிவரை ஆட்டமிழக்காமல் 83 ரன்களை எடுத்துள்ளார். இதையடுத்து,

சென்னை அணிக்கு 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கினர். இதில் அதிரடிக்கு சொந்தக்காரர்களான வாட்சன், டு பிலிஸிஸ் ஆகியோர் தங்களின் ரன்மழையை நிதானமாக தொடங்கியன. அப்போது எதிர்பாராத விதாமாக டு பிலிஸிஸ் ரன் அவுட் ஆனார்.பின்பு களமிறங்கிய குட்டி தல சுரேஷ் ரைனா வாட்சனுடன் ஜோடி சேர்ந்து அதிரடியை காட்டத்தொடங்கினர். ஆனால் ரஷித் கானில் சுழலில் சிக்கி சுரேஷ் ரைனா 38 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இவரைத்தொடர்ந்து வந்த ராயுடு வாட்சனின் அதிரடிக்கு பக்க பலமாக இருந்தார். ஒரு புறம் வாட்சன் அதிரடியை காட்டி அணியின் வெற்றிக்கு தேவையான ரன்களை சேர்பது மட்டுமின்றி தன்னுடைய அரை சதத்தையும் பதிவு செய்தார்.மறு புறம் ராயுடு நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதில் எதிர்பாராத விதமாக புவனேஷ்வர் வீசிய அசுர வேகத்தில் வாட்சன் தன்னுடைய விக்கெட்டை இழந்து 96 ரன்களுடன் வெளியேறினார். அவரைத்தொடர்ந்து ராயுடு-வும் 21 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய ஜாதவ் அணிக்கு தேவையான் வெற்றி ரன்னை அடுத்து வெற்றி பெற செய்தார். இறுதியாக சென்னை அணி கொடுக்கப்பட்ட இலக்கை ஒரு பந்து மிச்சம் இருக்க நான்கு விக்கெட்டை இழந்து வெற்றியை தன்வசமாக்கினர்.

இதன்மூலம் சென்னை அணி 11 ஆட்டத்தில் 8 வெற்றிகளை பெற்று பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of