தண்டையார்பேட்டையில் முழு ஊரடங்கா..? விரைவில் வெளியாகும் அறிவிப்பு

308

தண்டையார்பேட்டையில் முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து அமைச்சர் பாண்டியராஜன் பதிலளித்துள்ளார்.

சென்னையில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நேற்று வரையில் 24,545 ஆக உயர்ந்துள்ளது. அதிலும், ராயபுரம் மண்டலத்தில்தான் அதிக பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. எனவே, அங்கு கொரோனா பரவலை கட்டுப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும், தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

கொரோனா பாதிப்பில் ராயபுரத்திற்கு அடுத்தபடியாக தண்டையார்பேட்டை இருந்து வருகிறது.

இந்த நிலையில், தண்டையார்பேட்டையில் கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் பற்றி அமைச்சர் பாண்டியராஜன் 2வது நாளாக இன்றும் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, தண்டையார்பேட்டையில் முழு ஊரடங்கை அமல்படுத்தக்கோரி பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், “தண்டையார்பேட்டையில் வார்டு வாரியாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வியூகம் வகுக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்திற்குள் கொரோனா இல்லாத பகுதியாக தண்டையார் பேட்டையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தண்டையார்பேட்டையில் முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து முதலமைச்சர் முடிவு செய்வார்,” எனக் கூறினார்.

Advertisement