சென்னை தரமணியில் ரயிலுக்காக காத்திருந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்த ஊழியர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

581

சென்னை தரமணியில் ரயிலுக்காக காத்திருந்த காதல் ஜோடியை மிரட்டி, காதலியிடம் தவறாக நடக்க முயற்சித்த ரயில் நிலைய ஊழியர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை தரமணியில் நேற்றிரவு 10 மணியளவில் பறக்கும் ரயிலுக்காக காதல் ஜோடி காத்துக்கொண்டிருந்தனர். அப்போது, தரமணி ரயில் நிலையத்தில் லிஃப்ட் ஆப்பரேட்டராக பணிபுரியும் லூக்காஸ் என்பவர் அவர்களிடம் விசாரிக்க வேண்டுமென கூறி, டிக்கெட் கவுண்டருக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர், விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கூறி காதலரை வெளியேற்றிய ரயில் நிலைய ஊழியர்கள், காதலியிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்ததாக கூறப்படுகிறது. மேலும், 5ஆயிரம் ரூபாய் கொடுத்தால் தான் தங்களை விடுவிப்போம் என்றும், இல்லையென்றால் வழக்குப்பதிவு செய்து விடுவோம் என்று மிரட்டியதாக தெரிகிறது. இதனையடுத்து, அங்கிருந்து தப்பிய காதல் ஜோடி இதுகுறித்து, திருவான்மியூர் ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக, ரயில் நிலைய ஊழியர்கள்  லோகேஷ்வரன், ஸ்ரீராம் மற்றும் ஒப்பந்த தொழிலாளர் லூகாஸ் ஆகிய மூன்று பேரை எழும்பூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of