CAA போராட்டத்தை தொடர்வதா..? கைவிடுவதா..? – இன்று முக்கிய முடிவு

302

CAA-வுக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த 14ஆம் தேதி முதல் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இரவு பகலாக தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த போராட்டம் இன்று 15வது நாளை எட்டியுள்ளது.

இதனிடையே நேற்றிரவு முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், செய்தியாளர்களை சந்தித்த போராட்டக்குழுவினர், போராட்டத்தை கைவிடும்படி முதலமைச்சர் கேட்டுக்கொண்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து போராட்டக் களத்தில் உள்ள அனைவரிடமும் ஆலோசித்த பின்னர், போராட்டத்தை தொடர்வதா? கைவிடுவதா? என்பது குறித்து இன்று காலை அறிவிப்பதாக கூறினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of