தமிழகத்தில் 9 மாவட்டங்கள்…! வெயில் கொளுத்த போகுதாம்….! – வானிலை ஆய்வு மையம்

277

சென்னை: 9 மாவட்டங்களில் வெயில் சுட்டெரிப்பது 2 நாட்களுக்கு தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தென்தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பச்சலனம் மற்றும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் மழை பெய்து வருகிறது. அதே போல் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் மழை கொட்டி வருகிறது.

அதன் காரணமாக தென்மேற்கு பருவமழை எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இந் நிலையில் இன்று வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அதிக வெப்பம் நிலவக்கூடும். திருத்தணி, வேலூர், ராணிப்பேட்டை, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், திருச்சி, கரூர், மதுரையில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்.

9 மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்ஸியசையும், அதிகபட்ச வெப்பநிலை 42 டிகிரி செல்ஸியஸை ஒட்டியும் பதிவாகும். வெப்பச்சலனம் காரணமாக தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகள், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, கிருஷ்ணகிரியில் மழைக்கு வாய்ப்புள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம், பெரிய நாயக்கன் பாளையத்தில் 3 செ.மீ மழையும், கமுதியில் 2 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் நேற்று அதிக பட்சமாக கரூர் பரமத்தி, வேலூர் ஆகிய பகுதிகளில் 41.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது என்று தெரிவித்துள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of