அதிரடி காட்டிய சென்னை ! அன்பை பகிர்ந்த டோனி !

922

12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், 50-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து களமிறங்கைய டெல்லி அணி, சென்னை அணியின் சிறப்பான பந்து வீச்சில் திணறி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது.

டெல்லி அணி 16.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 99 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் ஆட்டம் முடிந்தவுடன் சென்னை அணியின் கேப்டன் டோனி மைதானத்தில் இருந்த ஊழியர்கள் மற்றும் ரசிகர்களிடம் தனது அன்பை பகிர்ந்து கொண்டார்.

bravo-csk-cap

மேலும் ரசிகர்களுக்கு மத்தியில் தோன்றிய டோனி மைதானத்தில் இருந்து கொண்டு ரசிகர்களை நோக்கி அவர்களுக்கு பந்தை அன்பாக அளித்த நிகழ்ச்சி மைதானத்தில் இருந்த அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. அரங்கமே எழுந்து நின்று, கைதட்டலுடன் ஆரவாரம் செய்தது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of