சென்னையில் நில அதிர்வு! – மக்கள் பீதி !!

625

சென்னையில் இன்று காலை லேசான நில அதிர்வை உணர்ந்ததாக சிலர் சமூக தளங்களில் முதல் ஷேர் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்வரும் மக்களைவை தேர்தலை முன்னிட்டு, தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகள் என கூட்டணி அமைப்பு பிஸியாக நடந்து வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை, கட்சிகளின் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளால் தலைநகர் சென்னை பரபரத்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், சென்னையில் இன்று காலை லேசான நில அதிர்வை உணர்ந்ததாக சிலர் சமூக தளங்களில் கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர். இன்று காலை 7:05 மணியளவில் நில அதிர்வை உணர்ந்ததாக சிலர் பதிவிட்டுள்ளனர்.

குறிப்பாக, தி.நகர் பகுதியில் தாங்கள் நிலநடுக்கத்தை உணர்ந்ததாக சிலர் தெரிவித்துள்ளனர். வெறும் 2-3 நொடிகள் மட்டும் லேசான அதிர்வை உணர்ந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

இதுகுறித்து தற்போது சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, சென்னைக்கு வடகிழக்கே கடலுக்கடியில் நில அதிர்வு மையம் கொண்டது. இதனாலேயே, சென்னையில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 4.9ஆக நில அதிர்வு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நில அதிர்வு செய்தி வெளியானதில் இருந்து, சென்னையைத் தாண்டி வெளியூர்களில் வசிக்கும் பலரும், இச்சம்பவம் குறித்தும், பாதுகாப்பு குறித்தும் சென்னையில் வசிக்கும் தங்கள் உறவினர்களிடம் நலம் விசாரித்து வருகின்றனர்.