“இதற்காக தான் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றேன்” – சீக்ரெட்டை சொன்ன சேரன்..!

893

பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தில் வெளியான பிக்-பாஸ் என்ற நிகழ்ச்சியில் இயக்குநர் சேரன் போட்டியாளராக கலந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டதால், பல்வேறு அவமானங்களை சந்தித்தாகவும், அவர் ஏன் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்றும் அவரது ரசிகர்கள் வினவி வந்தனர். இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநர் சேரன் கலந்துக்கொண்டார்.

அப்போது பேசிய அவர், பிரேமம், 96 போன்ற படங்கள் தான் இயக்கிய ஆட்டோகிராப் படத்தின் சாயலில் இல்லை என்றும், ஒவ்வொரு படமும், அந்த இயக்குநர்களின் சொந்த கற்பனையில் எடுக்கப்படுவதால், அனைத்திற்கும் தான் உரிமைகோர முடியாது என்றும் தெரிவித்தார்.

மேலும், தொடர்ந்து பேசிய அவர், இளைய தலைமுறையினர் தன்னையும், தனது படங்களையும் மறந்துவிட்டதால், அவர்களுக்கு மீண்டும் நினைவு படுத்தவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதாக இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of