கறிக்கடையில் அதிரடி ஆஃபர்! ஓட்டுப்போட்டா இவ்வளவு ரூபாய் தள்ளுபடியா?

453

100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் வலியுறுத்தி வருகிறது. அது போல் அந்தந்த மாநில அரசுகளும் தேர்தல் ஆணைய அதிகாரிகளும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருவது வாடிக்கையாகும்.

இந்நிலையில் சென்னையில் இறைச்சிக் கடைக்காரர் ஒருவர் இதுபோல் வாக்களிப்பதன் அவசியத்தை மக்கள் உணர கவர்ச்சிகர விளம்பரத்தை அளித்துள்ளார்.

தேர்தலில் வாக்களித்து வந்து அந்த மையை காட்டினால் சிக்கன் கிலோவுக்கு ரூ.50 தள்ளுபடி செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

இவர் அயனாவரத்தை சேர்ந்த கடைக்காரர் ஆவார். இதுதொடர்பான செய்தி இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of