ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தலைமை தேர்தல் அதிகாரிகளாக நியமணம்!!

88
parliament

தமிழகத்தின் கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரிகளாக 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால் தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையம் முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது.

அதன்படி தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணியாற்றும் அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டார். அதன்படி கடலூர் மாவட்டத்தில் 3 ஆண்டுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றிய 6 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரிகளாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பாலாஜி, ராஜாராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இருவரும் ஓராண்டுக்கு கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரிகளாக இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜாராமன் மருத்துவப் பணிகள் தேர்வாணையத் தலைவராகவும், பாலாஜி பொதுப் பணித்துறை கூடுதல் செயலாளராகவும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.