தலைமை நீதிபதி மீது பாலியல் புகார் : நெருப்போடு விளையாடுகிறீர்கள் – நீதிபதிகள் எச்சரிக்கை

484

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது பாலியல் புகார் தொடர்பான வழக்கில் நீதிபதிகள் அமர்வு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கொகாய் மீது ஒரு பெண் பாலியல் புகார் அளித்தார்.

இந்த விவகாரத்தில் வழக்கறிஞர் உத்சவ் சிங் பெயின்ஸ் கூறுகையில், தலைமை நீதிபதி மீது பொய்யாக பாலியல் வழக்கு தொடர 1 1/2 கோடி ரூபாய் வரை தன்னிடம் பேரம் பேசப்பட்டதாகவும் அதற்கு அந்த வழக்கறிஞர் மறுத்து அவர்களை வெளியே அனுப்பியதாகவும் தெரிவித்திருந்தார்.

அதில் அவர், “தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் அதிர்ச்சியைத் தருகிறது. புகார் கூறியவர் தரப்பில் நான் ஆஜராக விரும்பினேன்.

ஆனால் வழக்கு தொடர்பாக அஜய் என்பவர் என்னிடம் வந்து தெரிவித்த தகவல்கள் நம்பும்படியாக இல்லை. உடனே புகார் கூறியவரை (பெண்ணை) சந்திக்க வேண்டும் என நான் கூறினேன். ஆனால் அதற்கு அஜய் சம்மதிக்கவில்லை. நான் திட்டவட்டமாக மறுத்தேன்.

உடனே தலைமை நீதிபதி மீது வழக்கு போட ரூ.50 லட்சம் லஞ்சம் தர முன்வந்தார். பின்னர் அந்த தொகையை ரூ.1½ கோடி அளவுக்கு உயர்த்தினார். உடனே நான் அவரை வெளியே போகுமாறு கூறி விட்டேன்” என்றார்.

இந்த வழக்கை இன்று துணை தலைமை நீதிபதி போப்தி, இந்திரா பானர்ஜி, N.V.ரமணா ஆகியோர் விசாரணை நடத்தினர். 

இந்த நிலையில் விசாரித்த நீதிபதிகள், நீதிபதி மீதான அபாண்ட பழிக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

தலைமை நீதிபதி மீதான பாலியல் வழக்கு நீதித்துறையை கட்டுபடுத்த முயற்சிப்பதாக கூறிய நீதிபதிகள், நெருப்புடன் விளையாடுகிறீர்கள். பணம் மற்றும் அதிகாரம் படைத்தவர்கள் நீதித்துறையை ஒருபோதும் கட்டுப்படுத்தி இயக்கமுடியாது எனவும் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of