கொரோனா பரவலை தடுக்க, ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படாது – முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்

1347

டெல்லியில் கொரோனா பரவலை தடுக்க, ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படாது என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போதைய நிலையில் ஊரடங்கு அவசியமாகிறது என்றும், கொரோனாவுக்கு மையப்புள்ளியாக இருக்கும் பகுதிகளில், ஊரடங்கில் தளர்வு அளிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

ஒரு வாரத்திற்கு பிறகு மறு ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.

நேற்று முன்தினம் கொரோனா உறுதி செய்யப்பட்ட 186 பேருக்கும், எந்த அறிகுறியும் இல்லை என்றும், இது மிகவும் கவலை அளிப்பதகாவும் அவர் தெரிவித்தார்.

டெல்லி மக்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என விரும்புவதால், ஊரடங்கில் தளர்வு அளிக்க முடியாது என கூறினார்.

Advertisement