விவசாயிகளுக்கு இன்ப அதிர்ச்சி தந்த முதலமைச்சர்…! வெளியான முக்கிய அறிவிப்பு

1748

நாமக்கல், சேலம், ஈரோடு, கன்னியாகுமரி மாவட்டங்களில் மாவுப்பூச்சி தாக்குதலை தடுக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

உலகில் பல வகையான மாவுப் பூச்சிகள் உள்ளன. இந்த பூச்சிகள் மரவள்ளியை மட்டும் அல்லாது பப்பாளி, மல்பரி, மரவள்ளி, பருத்தி, கொய்யா, கத்தரி, தக்காளி, செம்பருத்தி, செவ்வந்தி, போன்ற பயிர்களையும், களைச்செடிகளையும் தாக்குகிறது.

இதனால் மகசூல் குறையும் நிலை ஏற்படுகிறது. இவற்றை முறையான மருந்துகளை கொண்டு கட்டுப்படுத்தலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், நாமக்கல், சேலம், ஈரோடு, கன்னியாகுமரி மாவட்டங்களில் மாவுப்பூச்சி தாக்குதலை தடுக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

மரவள்ளிப் பயிரில் மாவுப் பூச்சி தாக்குதலை தடுக்க ரூ.54.46 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஹெக்டேருக்கு ரூ.1,750 வீதம் 3,112 ஹெக்டேருக்கு நிதியை ஒதுக்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சரின் நிதி அறிவிப்பால், மரவள்ளி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement