தமிழகம் வரும் வெளிநாட்டு நிறுவனங்கள்..! ரூ.15 ஆயிரம் கோடி முதலீட்டில் ஒப்பந்தங்கள்…!

256

சென்னை: ரூ.15 ஆயிரம் கோடி முதலீட்டில் 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று சென்னையில் கையெழுத்தாகின்றன.

கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

கொரோனா காரணமாக உலக நாடுகளில் உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்கள் அந்தந்த நாடுகளில் இருந்து வெளியேறி வருவதாக தெரிகிறது. குறிப்பாக பல வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளன.

இவ்வாறு இடம் பெயரும் தொழில் நிறுவனங்களை தமிழகத்தில் தொழில் துவங்கும் வழிமுறைகளைக் கண்டறிந்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு சிறப்புக்குழு ஒன்று ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜெர்மனி, பின்லாந்து, ஜப்பான், சீனா, பிரான்ஸ், தைவான் உள்ளிட்ட நாடுகளின் நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்கின்றன. அதற்காக, ரூ.15 ஆயிரம் கோடி முதலீட்டில் 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று கையெழுத்தாகின்றன.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of