சொந்தக்காலில் நிற்கும் விவசாயிகளை ஒருபோதும் கொச்சைப்படுத்த வேண்டாம் – முதலமைச்சர் எடப்பாடி

79

தஞ்சையில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைத்திலிங்கம் இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர் தங்களுக்கு விளம்பரம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும் ஸ்டாலினே தங்களுக்கு விளம்பரம் செய்து கொடுக்கிறார் என தெரிவித்தார்.

ஸ்டாலினுக்கு விவசாயி என்றாலே பிடிக்காததற்கு காரணம் தெரியவில்லை எனக்கூறிய அவர் சொந்த காலில் நிற்கும் விவசாயிகளை எதிர்த்துப் போராடி ஸ்டாலினால் வெல்ல முடியாது என குறிப்பிட்டார்.

விவசாயிகளை ஸ்டாலின் கொச்சைப்படுத்த வேண்டாம் என்றும் பச்சை துண்டு போடுவதற்கு விவசாயி என்ற தகுதி வேண்டும் என கூறினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of