காதுல மைக்கு.. மார்டனாக மாறிய எடப்பாடி பழனிச்சாமி.

537

வடசென்னை தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜூக்கு வாக்களிக்கக்கோரி, ராயபுரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று பிரச்சாரம் செய்தார்.அப்போது உரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக்கவுமே,  பா,ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருப்பதாக தெரிவித்தார்.

அ.தி.மு.க. ஆட்சியில்தான் உயர்கல்வித்துறை வளர்ச்சிக்காக பல கல்வி நிறுவனங்கள் புதிதாக தொடங்கப்பட்டன என்றும் உயர்கல்வித்துறையில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது என்றும் அவர் கூறினார்.

தி.மு.க. ஆட்சியில் கடுமையான மின்வெட்டு ஏற்பட்டு விவசாயம், தொழில்துறை கடுமையாக பாதிக்கப்பட்டது என்று அவர்  குற்றம்சாட்டினார்.  அதி.மு.க .ஆட்சியில் தமிழகம் மின்மிகை மாநிலமாக உருவாகியிருக்கிறது என்றும் முதல்வர் தெரிவித்தார்.

தி.மு.க ஆட்சியில் பாலங்கள் கட்டுவதற்கு திட்டங்களை மட்டுமே தீட்டினார்கள், ஆனால், அதனை செயல்படுத்தியது அ.தி.மு.க. ஆட்சிதான் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of