புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் டெல்லியில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க கோரி முதலமைச்சர் நாராயணசாமி மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களை சந்தித்து வலியுறுத்தினார். இதுவரை எந்த பதிலும் கிடைக்காததால், இன்று டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது. இதில் காங்கிரஸ், தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உட்பட 21 கட்சியினர் கலந்துகொள்ள உள்ளனர்.

Advertisement