வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை விவி பேட் சிலிப்கள் மூலம் சரிபார்க்க வேண்டும் – ஆந்திர முதல்வர் கோரிக்கை

224

தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை விவி பேட் சிலிப்கள் மூலம் சரிபார்க்க வேண்டும் என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்துள்ளார்.

திருப்பதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும்போது இயந்திரங்களில்  பதிவான வாக்குகள் மற்றும் விவிபேட் சிலிப் இரண்டையும் எண்ணி சரிபார்க்க வேண்டியது அவசியம் என்று கூறினார்.

மோடிக்காகவோ அல்லது வேறு யாருக்காகவோ தேர்தல் ஆணையம் பணியாற்றக்கூடாது என்று சந்திரபாபு நாயுடு கேட்டுக்கொண்டார். ஜனநாயகத்தை காப்பாற்ற ஒவ்வொருவரும் போராட வேண்டிய அவசியம் உள்ளது என்று தெரிவித்த அவர், தேர்தல் ஆணையம் மக்கள் பிரச்னைகளை கருத்தில் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of