போராட்டத்தை கைவிட அரசு ஊழியர்களுக்கு வேண்டுகோள் – முதலமைச்சர் பழனிசாமி

408

மாணவர்களின்  நலனை கருத்தில் கொண்டு போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என அரசு ஊழியர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் 7வது ஊதியக்குழுவின் பரிந்துரையை ஏற்று, மாநில அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வை உடனே வழங்கியதை குறிப்பிட்டுள்ளார்.

இதனால் ஆண்டுக்கு 14 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டாலும், அரசு ஊழியர்களின் நலன் கருதி கடும் நிதிச்சுமைக்கு இடையே ஊதிய உயர்வு அமல்படுத்தியதுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எனவே, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்கள் போராட்டங்களை உடனே கைவிட்டு மக்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of