ஜெ., பாதையில் இருந்து அவர் விலகிவிட்டார்.., ப. சிதம்பரம்

269

நடக்க இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தில் திமுக-வுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்து போட்டியிட உள்ளது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, இன்று காங்கிரஸ் கட்சி தமிழக தேர்தல் அறிக்கையை மதுரை திருப்பரங்குன்றத்தில் முன்னாள் நிதி அமைச்சசர் ப. சிதம்பரம் வெளியிட்டார்.

பின்னர் அவர் கூறுகையில்,

ஜெயலலிதாவின் பாதையில் இருந்து முதலமைச்சர் பழனிசாமி விலகிவிட்டார். இந்தியாவில் பல தேர்தல்களில் பிரதமர் யார் என்பதை தேர்தலுக்கு பின்னரே முடிவு செய்துள்ளார்கள். பிரதமர் யார் என்பதை கூட்டணி கட்சி தலைவர்கள் முடிவு செய்வர். காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்தால், அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளும் இடம்பெற சிறப்பான வாய்ப்பு உள்ளது.

பெட்ரோல், டீசல் எங்களின் உண்மையான ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வரப்படும். ஜிஎஸ்டி முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டு புதுமையான ஜிஎஸ்டி அமல்படுத்தப்படும். நாடு முழுவதும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தீயாக பரவியுள்ளது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ஏழை எளிய மக்கள் மீது வரிச் சுமைகள் இருக்காது என தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of