கோடநாடு விவகாரத்தை கிளப்பி தி.மு.க பொய் பிரச்சாரம். முதலமைச்சர் பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

461

கோடநாடு விவகாரத்தை கிளப்பி தி.மு.க பொய் பிரச்சாரம் செய்வதாக முதலமைச்சர் பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையை அடுத்த காட்டுபாக்கத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது, இதில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் பழனிசாமி, எம்.ஜி.ஆர் செய்த சேவையால் மறைந்தும், மறையாமல் மக்கள் மனதில் வாழ்ந்து வருவதாக தெரிவித்தார்.

கேரளாவில் கொலை, கொள்ளையில் ஈடுபட்டவர்களை கொண்டு தி.மு.க அவதூறு பரப்ப முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார். கோடநாடு எஸ்டேட் தனியார் வசம் உள்ளதை சுட்டிக்காட்டிய அவர், ஆட்சிக்கு இடையூறு கொடுத்து வருவோரிடம் தமக்கு எதிரான ஆதாரம் இருந்தால் சும்மா விடுவார்களா என்றும் முதலமைச்சர் கேள்வி எழுப்பினார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of