சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி

260

பொதுமக்களை வீடு தேடி சென்று மனுக்களை பெற்று ஒருமாதத்திற்குள் தீர்வு காணும் வகையிலான சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

சேலம் மாவட்டம் நங்கவள்ளியில் முதலமைச்சர் தொடங்கி வைத்த திட்டத்தின் படி, நகர்புற வார்டுகள், கிராமங்கள் தோறும் நேரடியாக சென்று மக்களிடம் மனுக்கள் பெறப்படும். மனுக்கள் அனைத்தும் கணினியில் பதியப்பட்டு ஒரு மாதத்திற்குள் தீர்வு காணப்படும்.

மக்களிடம்  பெறப்படும் மனுக்கள் ஒரு வாரத்திற்குள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு, ஒரு மாதத்திற்குள் தீர்வு காணப்படும். முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தை தொடக்கி வைத்த பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, மக்களிடம் இருந்து பெறுப்படும் மனுக்களில் தகுதியான மனுக்களுக்கு ஏற்ப தீர்வு காணப்படும் என்று கூறினார்.

நாட்டிலேயே தடையில்லா மின்சாரம் வழங்குவது தமிழகம் தான் என்று அவர் பெருமிதம் தெரிவித்தார். தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் சிறப்பு குறைதீர் திட்டம் அமல்படுத்தப்படும் என்று முதல்வர்  பழனிச்சாமி உறுதியளித்தார்.

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of