ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று சந்தித்து ஆலோசனை நடத்துகிறார் முதல்வர் பழனிசாமி

768

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று இரவு 7 மணிக்கு முதலமைச்சர் பழனிசாமி சந்திக்கவுள்ளார். அப்போது, தமிழகத்திற்கு விடுக்கப்பட்டுள்ள ரெட் அலர்ட் எச்சரிக்கை குறித்தும், இதற்காக அரசு சார்பில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் விளக்கமளிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பேச்சுவார்த்தையில், துறை சார்ந்த அமைச்சர்கள் பங்கேற்பார்கள் என தெரிகிறது. இதனிடையே, இந்த சந்திப்பின் போது, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement