டெல்லியில் பிரதமர் மோடி முதலமைச்சர் பழனிசாமி, அதிமுக எம்.பி.களுடன் ஆலோசனை

337
modi-palanisamy

டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்கும் முதலமைச்சர் பழனிசாமி, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மக்களவை துணை சபாநயர் அலுவலகத்தில் வைத்து அதிமுக எம்.பி.களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க அனுமதி கேட்டு கடந்த மாதம் 30-ந் தேதி பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பினார். இந்நிலையில், பிரதமர் மோடியை, முதலமைச்சர் பழனிசாமி இன்று சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது.

பிரதமர் மோடியை சந்திக்க முதலமைச்சர் பழனிசாமி மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று மாலை டெல்லி புறப்பட்டு சென்றனர். இன்று பிரதமர் மோடியை சந்திக்கும் முதலமைச்சர் பழனிசாமி, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மக்களவை துணை சபாநாயகர் அலுவலகத்தில் வைத்து அதிமுக எம்.பி.களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். இதைத்தொடர்ந்து டெல்லியில் கட்டப்பட்டு வரும் அதிமுக அலுவலகத்தை நேரில் சென்று பார்வையிட உள்ளார்.