தலைமைச் செயலாளர் அறிக்கை தர ஆணை

494

ஏரிகளின் ஆக்கிரமிப்பு அகற்றம் குறித்து தலைமைச் செயலாளர் அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி தி.மலையை சேர்ந்த முனிகிருஷ்ணன் என்பவர் வழக்கு பதிவு செய்துள்ளார்.

அவர் அளித்த மனுவில் தமிழகத்தில் உள்ள 19,000 ஏரிகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும், ஏரிகளின் ஆக்கிரமிப்பை அகற்ற அரசு எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை எனவும் தமிழகம் முழுவதும் உள்ள ஏரிகளை அளவீடு செய்து எல்லைகளை நிர்ணயிக்கை வேண்டும் எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of