குழந்தைகளை பாலியல் கொடுமைக்குள்ளாக்கினால் மரண தண்டனை…

330

போக்சோ சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் தண்டனையை அதிகரிக்க மத்திய அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ், இனி 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், போக்சோ சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் தண்டனை அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார்.

கொடூரமான குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்க போக்சோ சட்டத்தில் வழிவகை செய்யப்படும் என்றும் கூறினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of