டீவி இண்டர்வியூக்காக சென்ற குழந்தை நட்சத்திரத்திற்கு நடந்த சோகம்

836

சத்தீஸ்கர் மாநிலத்தின் ஜஞ்கீர் சம்பா எனும் பகுதியைச் சேர்ந்தவர் சிவலேக் சிங்(14). இவர் இந்தி சின்னத்திரை சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார்.

இவர் நடித்த இந்தி நாடகங்களாக சசுரல் சிமர் கா, ஹனுமான் போன்ற சீரியல்களால் புகழ்ப்பெற்றார். சிவலேக் தனது பெற்ரோருடன் தற்போது மும்பையில் தங்கியுள்ளார்.இவர் தனது பெற்றோருடன் பிலாஸ்பூர் பகுதியில் இருந்து ராய்ப்பூருக்கு பிரபல டீவி ஒன்றில் இண்டர்வியூ கொடுப்பதற்காக காரில் சென்றுக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த டிரக்கில் கார் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சிவலேக் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிவலேக்கின் பெற்றோர் படுகாயம் அடைந்திருப்பதை கண்டு அவர்களை  உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போலீசார் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of