இந்தாங்க.. குற்றத்தை தடுங்க… போலீஸ் கமிஷனரை நெகிழவைத்த சிறுமி..

214

சென்னை நகரில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கு தான் சேமித்த பணத்தில் இருந்து ரூ.1½ லட்சம் வழங்கிய சிறுமியை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் பாராட்டு தெரிவித்தார்.

இதுதொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகம் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது சென்னை காட்டுப்பாக்கம் பகுதியை சேர்ந்த சத்யநாராயணா என்பவரின் மகள் ஸ்ரீஹிதா(வயது 9). 3-ம் வகுப்பு படித்து வருகிறார்.

ஸ்ரீஹிதா கடந்த சில வாரங்களுக்கு முன்பு ராயப்பேட்டையில் உள்ள தனது தந்தை அலுவலகத்துக்கு சென்றார். அப்போது அங்கு போலீசார் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டிருந்தனர். இதுகுறித்து சிறுமி ஸ்ரீஹிதா, தனது தந்தையிடம் கேட்டிருக்கிறார்.

அதற்கு அவர், கண்காணிப்பு கேமரா மூலம் போலீசார், பல குற்றவாளிகளை கைது செய்திருப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறுமி ஸ்ரீஹிதா தனது சேமிப்பு பணத்தில் ரூ.1½ லட்சத்தை கேமராக்கள் பொருத்துவதற்கு வழங்கலாம் என்று யோசனை தெரிவித்துள்ளார்.

அதன்படி ஸ்ரீஹிதா தனது தந்தை சத்யநாராயணாவுடன் போலீஸ் அதிகாரிகளை சந்தித்து ரூ.1½ லட்சத்தை வழங்கினார். இதனையடுத்து சிறுமி ஸ்ரீஹிதாவை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் வரவழைத்து பாராட்டினார். என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.