கண்களை குருடாக்கி சிறுவன் கொடூரக் கொலை..!

402

பீகார் மாநிலம் நாளந்தாவில் நேற்று சுனு குமார் என்ற 15 வயது சிறுவன் கண்கள் குருடாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். மர்மநபர்கள் சிறுவனின் உடல் அருகிலிருந்த குளத்தில் வீசியுள்ளனர்.

அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்த பின் அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டுள்ளனர்.

உயிரிழந்த சிறுவனின் கண்களில் ரத்தம் வடிந்ததாகவும், வேறெந்த காயங்களும் உடலில் இல்லை என்றும் நாளந்தா காவல்துறை எஸ்.பி. நிலேஷ் குமார் தெரிவித்தார்.

உடற்கூறாய்வுப்பின் தான் இறப்பிற்கான காரணம் தெரியவரும் எனவும் அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

சுனுகுமாரின் தந்தை பிரபல ஊடக நிறுவனத்தில் மூத்த பத்திரிகையாளராக பணிபுரிந்துவருகிறார்.

மர்ம நபர்கள் அவரை கொல்வதற்கு முன் கண்களை குருடாக்கி கொலை செய்திருக்ககூடும் என்றும் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of