ஏமன் நாட்டில் 50 லட்சம் குழந்தைகள் வறட்சி மற்றும் பஞ்சத்தால் பாதிக்கப்படும் அபாயம்

578

ஏமன் நாட்டில் 50 லட்சம் குழந்தைகள் வறட்சி மற்றும் பஞ்சத்தால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக Save the Children என்ற தனியார் தொண்டு நிறுவனம் எச்சரித்துள்ளது.

2015-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து அதிகரித்து வரும் மோதலால் ஏமன் பெரிதும் சீர்குலைந்துள்ளது. அக்காலகட்டத்தில் இந்த பகுதியை ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர்.

மேலும் கடும் மோதல் ஏற்பட்ட சூழலில், ஏமன் அதிபர் அபடுருபூ மன்சோர் ஹாதி, நாட்டை விட்டு தப்பிச் செல்ல நேரிட்டது. தொடர்ந்து ஏமனில் நடைபெற்று வரும் மோதல்களால் அதிகரித்து வரும் உணவுப் பொருட்களின் விலை மற்றும் ஏமன் நாட்டு நாணயத்தின் வீழ்ச்சி ஆகியவற்றால் பல குடும்பங்கள் உணவுப் பொருட்கள் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.

போர் தொடங்கிய காலத்தைவிட தற்போதைய காலகட்டத்தில் உணவு பொருட்களின் விலை 68 சதவீதம் உயர்ந்துள்ளது. தற்போது மொத்தம் 50 லட்சம் குழந்தைகள் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கு ஆய்வு நடத்திய தனியார் அமைப்பு தெரிவித்துள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of