உலகில் முதன்முறையாக மனிதருக்கு பறவைக் காய்ச்சல்

1436

உலகில் முதன்முறையாக சீனாவில் மனிதருக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் 41 வயதான நபருக்கு H10 N3 பறவைக்காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகிலேயே இந்த வைரஸ் பாதித்த முதல் நபராக அவர் கருதப்படுகிறார். இருப்பினும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு முழுவதும் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவருக்கு வைரஸ் பாதிப்பு எப்படி ஏற்பட்டது என்பது குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

இந்த H10 N3 வைரஸ் குறைந்த அளவே பாதிப்பு ஏற்படுத்தும் நோய்க்கிருமி என்றும், இது கோழிகளின் மூலம் பரவும் வைரஸின் திரிபு என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பெரிய அளவில் பரவுவதற்கான வாய்ப்பு இல்லை என்று சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

Advertisement