எல்லையில் படையை குவித்த சீனா – பீரங்கிகளால் பதில் சொன்ன இந்தியா

411

லடாக் எல்லையில் சீனாவின் படைக்குவிப்பை தொடர்ந்து கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா சக்திவாய்ந்த பீரங்கிகளை நிறுத்தியுள்ளது. இதனால் எல்லையில் மீண்டும் போர் மேகம் சூழ்ந்துள்ளது.

சீனா தனது படைகளை குவித்துள்ள காட்சிகள் செயற்கைக்கோள் மூலமாக படமாக்கப்பட்டு வெளியாகி உள்ளன. மேலும் தனது உரிமை கோரும் பகுதியை தாண்டி 423 மீட்டர் இந்திய நிலத்தையும் ஆக்கிரமிப்பு செய்துள்ளது.

இந்தியா – சீனா இடையே சமாதானப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டாலும் இருநாடுகளும் படைகளை குவித்த வண்ணம் உள்ளன. சீனா சமீபத்தில் பலமாக ராணுவ தளவாடங்களை எல்லையில் நிறுத்தியது.

இந்நிலையில் இந்தியா தனது சக்தி வாய்ந்த D-90 பீஷ்மா பீரங்கிகளை அதிகளவுக்கு எல்லையில் குவித்துள்ளது. துல்லியமான தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் இந்த பீரங்கி, ஒருநிமிடத்தில் 60 குண்டுகளை பொழியும் ஆற்றல் மிக்கது. 48 டன் எடை கொண்ட இந்த பீரங்கி ஆயிரம் குதிரை விசை ஆற்றல் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of