சீன ராணுவம் செய்த காரியம்..? பரபரப்பான லடாக் எல்லை..!

613

லடாக்கின் கிழக்கு எல்லைக் கோட்டுப் பகுதியில், சீனா ராணுவ வீரர்களை குவித்து, எல்லைப் பகுதியை ஆக்கிரமிக்கும் முயற்சியில் ஈடுபட்டது.

இதனை இந்திய ராணுவத்தினர் தடுக்க முயன்றபோது ஏற்பட்ட மோதலில், இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். இதனால் எல்லையில் இருநாட்டு படைகளும் அதிக அளவில் குவிக்கப்பட்டு போர் பதற்றம் நிலவியது.

எல்லையில் பதற்றத்தை தணிக்க, இந்தியா-சீனா இடையே பல கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து, இரு தரப்பிலும் படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன.

இந்நிலையில் இந்திய – சீன எல்லைக்கோட்டுப் பகுதியின் கிழக்கு லடாக்கில் 40 ஆயிரம் சீன ராணுவ வீரர்கள் மற்றும் ராணுவ தளவாடங்கள் மற்றும் போர் ஆயுதங்களுடன் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் லடாக் எல்லையில் மீண்டும் பதற்றம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.