பரவி வரும் கொரோனா வைரஸ் : சீனாவில் 400-கும் மேற்பட்டோர் பாதிப்பு

290

சீனாவில் கொரோனா என்னும் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் சுவாச கோளாறு உள்ளிட்ட நோய்களால் அந்நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9-ஆக அதிகரித்துள்ளது. மேலும், 400-கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Virus

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, மக்கள் அதிகம் கூடும் விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் பொதுமக்கள் முக கவசம் அணிந்துபடி செல்கின்றனர்.

மருத்துவமனைகளில் உடலை முழுமையாக மூடக்கூடிய பிரத்யேக உடைகளை அணிந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதனிடையே, டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு, சீனா, ஹாங்காங்கில் இருந்து வரும் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of