ரூ.2 லட்சம் வந்த பில்.. சொல்லாமல் ஓடிய காதலன்.. உணவகத்தில் தவித்த பெண்..

5523

சீனாவில், 23 வயது இளம்பெண் ஒருவருடன், 29 வயது இளைஞர் டேட்டிங் செல்வதற்கு கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண்ணும் சரி என்று சொல்லியுள்ளார். மேலும், டேட்டிங்கின் போது ஏற்படும் அனைத்து செலவுகளையும் நீ ஏற்க வேண்டும் என்றும் அந்த பெண் நிபந்தனை விதித்திருக்கிறார்.

இவ்வாறு இருக்க, ஓட்டல் ஒன்றில், அந்த ஆண், இளம்பெண்ணிற்காக காத்திருந்துள்ளார். ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக தனது 23 குடும்ப உறுப்பினர்களையும் அப்பெண் ஓட்டலுக்கு அழைத்து வந்துள்ளார்.

அனைவரும் தங்களுக்கு தேவையான உணவை இஷ்டம்போல், ஆர்டர் செய்துள்ளனர். இறுதியில் பில்லை பெற்ற அந்த நபர், ஷாக்கில் உறைந்து போய்விட்டார் என்று சொல்லலாம். ஆம், 2.18 லட்சம் வரை ஓட்டல் பில் வந்துவிட்டது.

இதையடுத்து, பில்லை செலுத்தாமல் அங்கிருந்து தப்பியோடி விட்டார் அந்த நபர். பின்னர் அந்த இளைஞரை தொடர்புகொண்ட இளம்பெண் பாதி பணத்தை இளைஞரும் மீதமுள்ள பணத்தை உறவினர்களும் பகிர்ந்து செலுத்தலாம் என்று கூறி பிரச்சனையை முடிவு செய்துள்ளனர்.

Advertisement