பாகிஸ்தானில் வெட்டுக்கிளி தாக்குதலை சமாளிக்க வாத்துப்படையை அனுப்பிய சீனா

271

பாகிஸ்தான் நாட்டின் தெற்கு மாகாணமாக சிந்து முதல் வடகிழக்கு மாகாணமான கைபர் பக்துவா வரையிலான பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்டுள்ள கோதுமை உள்ளிட்ட பயிர்களை வெட்டுக்கிளிகள் நாசம் செய்து வருகிறது.

இதனால் பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த வெட்டுக்கிளி தாக்குதலை சமாளிக்க அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

வெட்டுக்கிளி படையெடுப்பை தடுப்பதற்கு உதவுவதற்காக விசேஷமாக வளர்க்கப்படும் ஒரு லட்சம் வாத்துகள் அடங்கிய படையை பாகிஸ்தானுக்கு சீனா அனுப்புகிறது.

இதனை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். சீனாவிலிருந்து பாகிஸ்தானுக்கு அனுப்ப வாத்து இராணுவம் தயாராக உள்ளது என்று ஜிஜியாங்கிலிருந்து நிங்போ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒரு கோழி ஒரு நாளைக்கு 70 வெட்டுக்கிளிகளை சாப்பிடும், ஆனால் ஒரு வாத்து 200 க்கும் மேற்பட்ட வெட்டுக்கிளிகளை சாப்பிடும்  என்று ஜி ஜியாங் வேளாண் அறிவியல் அகாடமியின் ஆராய்ச்சியாளர் லு லிஷி தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of