‘அந்த பயம் புடிச்சிருக்கு..’ இந்தியாவின் நடவடிக்கை.. பயத்தில் சீன தூதரின் டுவீட்..

1065

இந்திய ராணுவத்தை சேர்ந்த படை வீரர்கள் மீது, சீன ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இந்திய ராணுவத்தை சேர்ந்த படை வீரர்கள் சிலர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தையடுத்து, சீன பொருட்களை தவிர்க்க வேண்டும் என்று பலரும் கூறி வந்தனர். இதற்கிடையே, டிக்-டாக் உள்ளிட்ட சீனாவின் மிகமுக்கிய செயலிகள் பலவற்றை இந்திய அரசாங்கம் தடை செய்து, அதிரடி நடவடிக்கை எடுத்தது.

இதுமட்டுமின்றி, மேலும், பல நடவடிக்கைகளை சீனாவின் மீது இந்திய அரசாங்கம் எடுத்து வருகிறது. இந்நிலையில், சீன தூதர் சன் வீடோங் தனது டுவிட்டர் பக்கத்தில் டுவீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், சீனாவுடனான பொருளாதாரத்தை துண்டித்தால் அது இரு நாடுகளையும் கடுமையாக பாதிக்கும் என்று கூறினார். மேலும், நமது பொருளாதாரங்கள் பின்னிப்பிணைந்தவை என்றும், ஒன்றோடொன்று சார்ந்தவை என்றும் கூறியுள்ளார்.

இந்த டுவீட்டை பார்த்த நெட்டிசன்கள், இந்தியாவை சமாதானப்படுத்தவே சீனா அரசாங்கம் இத்தகைய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறி வருகின்றனர்.

Advertisement