நாய் மற்றும் பூனை இறைச்சி உண்பதற்கு தடை – சீனா அரசு அதிரடி

718

சீனாவில் ஹுபெய் மாகாண தலைநகர் உகானில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸால் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரசால் சீனாவில் மட்டும் இதுவரை 2 ஆயிரத்து 804 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவின் அழிவை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்றன. இந்நிலையில் கொரோனா வைரஸ் விலங்குகளிடம் இருந்தே மனிதர்களுக்கு பரவுவதாக விஞ்ஞானிகள் சந்தேகிக்கின்றனர்.

இதனால் நாய் மற்றும் பூனை இறைச்சிகள் விற்பனைக்கும், அவற்றை உண்பதற்கும் தடை விதிக்க வேண்டும் என தெற்கு சீன தொழிற்நுட்ப மையம், சீன அரசுக்கு பரிந்துரைத்தது.

இதன் தொடர்ச்சியாக, தற்போது சீனாவில் பன்றி இறைச்சி, கோழி, மாட்டிறைச்சி, முயல், மீன், கடல் உணவுகள் உள்ளிட்ட 9 இறைச்சி வகைகள் மட்டுமே உண்ண அரசு அனுமதி அளித்துள்ளது.

மேலும் நாய் மற்றும் பூனைகளை செல்ல பிராணிகளாக வளர்க்க மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் உண்பதற்கு தடை விதிக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்ற சீன அரசு நாய் மற்றும் பூனை இறைச்சியை உண்பதற்கு தடை விதித்துள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of