எங்களுக்கும் தெரியும்.. அமெரிக்காவை அலற வைத்த சீனா..

1017

உலக அளவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்கா, இந்த வைரசை சீனா வேண்டுமென்றே உலக நாடுகளுக்கு பரப்பியதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

வெறும் குற்றச்சாட்டுடன் நிற்காமல் சீனாவுக்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் உள்ள சீன தூதரகத்தை உடனடியாக மூட அதிபர் டிரம்ப் நிர்வாகம் திடீரென உத்தரவு பிறப்பித்தது.

அமெரிக்காவின் அறிவு சார் சொத்துகள் மற்றும் தனியார் தகவல்களை பாதுகாப்பதை நோக்கமாக கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக டிரம்ப் நிர்வாகம் தெரிவித்தது.

அமெரிக்காவில் உள்ள மேலும் சில சீன தூதரகங்களை மூட உத்தரவிட வாய்ப்பு உள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். தூதரக ரீதியிலான இந்த பிரச்சினையை அமெரிக்கா மற்றும் சீனா இடையே மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

தூதரக மூடல் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு பதிலடி தரும் விதமாக சீனாவின் செங்டு நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தை மூட சீனா உத்தரவிட்டுள்ளது.