“இனி மாஸ்க் வேண்டாம்..” இந்த நாடா இப்படி சொல்கிறது..? நெட்டிசன்கள் புலம்பல்..!

972

சீனாவின் வூகான் நகரில் தொடங்கிய வைரஸ் தொற்று, தற்போது உலகத்தின் சந்து பொந்துகளிலும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தடுப்பூசி இல்லாததால், பெரும் ஆட்டத்தை ஆடிய வைரஸ் தொற்று, இதுவரை இல்லாத அளவிலான பொருளாதார பாதிப்புகளையும், சுகாதார பாதிப்புகளையும் உருவாக்கியுள்ளது.

இதில் இருந்து மீள முடியாமல் பல்வேறு நாடுகள் சிக்கித்தவித்து வரும் சூழலில், தற்போது சீனாவின் தலைநகரில் முகக்கவசம் அணிய வேண்டாம் என்று அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் உள்ள மக்கள் மாஸ்க் அணிவதற்கு காரணமாக இருந்துவிட்டு, தற்போது இவர்கள் அதில் இருந்து தளர்வு பெற்றுவிட்டார்களே என்று நெட்டிசன்கள் இணையத்தில் புலம்பி வருகின்றனர். இதற்கான தடுப்பூசி உருவாக்குவது ஒன்று தான் தீர்வு என்று உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே கூறியது நினைவுக்கூரத்தக்கது.