எல்லை விவகாரம்: சீனாவிடம் ஏதோ ஒரு திட்டம் உள்ளது – வெள்ளை மாளிகை

402

உலகில் பல்வேறு நாடுகளிடம் சீனா ராணுவ ரீதியாக அத்து மீறுவது போன்று, இந்தியாவுடனும் அத்து மீறி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

இந்தியா மற்றும் சீனா இடையிலான லடாக் மோதலை உலக நாடுகள் கவனிக்க தொடங்கியுள்ளது என்றும், இதில், சீனா செய்யும் அத்துமீறலை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது என குறிப்பிட்டுள்ளது.

லடாக் பிரச்சினையை பொறுத்தவரை இந்தியாவிற்கு ஆதரவாக இருப்போம் என்றும், இந்தியாவிற்கு ஆதரவாக படைகளை அனுப்புவோம் என்று அமெரிக்கா வெளிப்படையாக கூறியுள்ளது.

இந்நிலையில் இந்தியா- சீனா மோதல் தொடர்பாக வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், லடாக் எல்லை விவகாரத்தில் சீனாவிடம் ஏதோ திட்டம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of