தகவல் பொருளாதாரத்தில் செழுமையான வளர்ச்சியில் சீனா..!

374

சீனாவின் ச்சே ச்சியாங் மாநிலத்தின் வூ ட்சென் நகரில் 22 ஆம் நாள் நடந்து முடிந்த 6ஆவது உலக இணைய மாநாட்டில் முகவருடி மூலம் பொருட்களை வாங்கும் கருவி, வீட்டில் பயன்படுத்தப்படும் நூதன சாதனப் பொருட்கள், உடனடியாக முடிவு கிடைக்கும் மருத்துவ சோதனைக் கருவிகள் ஆகியன காட்சிப்படுத்தப்பட்டன.

இவை சீன தகவல் பொருளாதாரத்தின் செழுமையான வளர்ச்சியை வெளிகாட்டியுள்ளது. கடந்த ஆண்டில், சீனத் தகவல் பொருளாதார அளவு, சீன உள் நாட்டு உற்பத்தி மதிப்பில் 34.8 விழுக்காட்டை வகித்தது.

இது சீனப் பொருளாதார வளர்ச்சியின் புதிய தூணாகும் என்று இம்மாநாட்டில் வெளியிடப்பட்ட 2019ஆம் ஆண்டு சீன இணைய வளர்ச்சி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of