4ஜி காலம் போயாச்சு – 5 ஜி காலம் வந்தாச்சு, மகிழ்ச்சியில் சீனா | 5G Network

299

மின்னலை விட வேகமா வளர்கிறது இக்கால தொழில்நுட்பம் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இணைய தொழில்நுட்பத்தில் பல நாடுகள் தற்போது 4ஜி சேவையை அளித்து வருகின்றது. மேலும் சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அடுத்த கட்டமாக 5ஜி சேவையை அறிமுக செய்ய ஆர்வமாக உள்ளார். 5ஜி சேவையில் இணைய வேகம் 4ஜி சேவையை விட 20 முதல் 100 மடங்கு வரை அதிக வேகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது சீனா மொபைல்ஸ், சீனா டெலிகாம் மற்றும் சீனா யுனிகாம் ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 5ஜி சேவை பற்றிய அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளன. முதற்கட்டமாக பீஜிங், ஷாங்காய் போன்ற முதல் தர நகரங்கள், வூகான், நஞ்சிங் போன்ற இரண்டாம் தர நகரங்கள் என மொத்தம் 50 நகரங்களில் மட்டும் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது.

5ஜி சேவையை இந்தியாவில் தொடங்க அமெரிக்காவும், சீனாவும் போட்டி போட்டு வந்த நிலையில், முதல்கட்டமாக சீனா அதனை தங்கள் நாட்டிலேயே அறிமுகம் செய்துள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of