பகையை மறந்து உதவிய இந்தியா..! சீன அதிகாரிகள் பாராட்டு..!

3648

லடாக் எல்லையில் உள்ள சுமர்-டெம்சோக் செக்டார் பகுதியில் கடந்த 19-ஆம் தேதி இந்திய பாதுகாப்பு படையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது இந்திய எல்லைக்குள் சுற்றித்திரிந்த சீன ராணுவ வீரரை இந்திய ராணுவத்தினர் பிடித்தனர்.

பிடிபட்ட சீன வீரரிடம் நடத்திய விசாரணையில் அவர் கவனக்குறைவாக இந்திய எல்லைக்குள் நுழைந்தது தெரியவந்தது. மேலும், பிடிபட்ட சீன ராணுவ வீரரின் பெயர் வாங் யா லாங் எனவும் தெரியவந்தது.

மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டிருந்த அந்த வீரருக்கு தேவையான மருத்துவம், உணவு, உடைகள் வழங்கப்பட்டன. இந்நிலையில் உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன் சீன வீரர் வாங் யா நேற்று இரவு சீன ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.

சுசுல் மோல்டோ என்ற இடத்தில் நடந்த சந்திப்பின்போது அந்த வீரர் ஒப்படைக்கப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

Advertisement