வயதான மூதாட்டிக்கு கின்னஸில் இடம் – வயது எவ்வளவு தெரியுமா?

447

உலகில் அதிகமான வயதுடைய பெண்மணியாக ஜப்பானிய மூதாட்டி கின்னஸில் இடம்பிடித்துள்ளார்.

ஜப்பானின் புகுவோகா பகுதியை சேர்ந்த 116 வயதான கானே தனாகா, உலகின் மிக வயதான பெண்ணாக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

ஜப்பானை சேர்ந்த கேன் டனாகா கடந்த 1903 ஜனவரி 2ம்தேதி பிறந்தார். மேற்கு ஜப்பானின் புகுவோகா பகுதியில் டனாகா வசித்து வருகிறார். கடந்த 1922-ல் அவருக்கு ஹிடியோ என்பவருடன் திருமணம் முடிந்தது. இந்த தம்பதிக்கு 4 குழந்தைகள் பிறந்தன.

5-வதாக ஒரு குழந்தையை அவர்கள் தத்தெடுத்துக் கொண்டனர். தற்போது, மருத்துவமனையில் உள்ள, கானே தனாகாவை சந்தித்த கின்னஸ் புத்தக அதிகாரிகள் உலக சாதனைக்கான சான்றிதழை அவரிடம் வழங்கினர்.

இதற்கான நிகழ்ச்சியில், தனது குடும்பத்தினர் புடைசூழ, மூதாட்டி கலந்து கொண்டார். நகரும் நாற்காலியை பிடித்தவாறு, தாமே நடந்து செல்லவதை வழக்கமாக கொண்டுள்ளார். கேன் டனாகா இன்னமும் கணக்கு பாடங்களை படித்துக் கொண்டு, செஸ், கேரம் விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.