10 செகண்ட்ல 100 கி.மீ. வேகம்..! சீன அதிபரின் அசத்தலான கார்..! மேலும் பல சிறப்பம்சங்கள்..!

706

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெருவதை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தபட்டுள்ளது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வரும் சீன அதிபர், அங்கிருந்து தனது பிரத்யேக கார் மூலமாகவே, மாமல்லபுரம் செல்ல உள்ளார்.

சீனாவின் அதிபர், பிரதமர் யாராக இருந்தாலும் எந்த நாட்டுக்கு சிறப்பு விருந்தினராகச் சென்றாலும் அந்நாட்டு அரசு அளிக்கும் காரில் செல்வதைத்தான் வழக்கமாக வைத்திருந்தார்கள். ஆனால், 2014-ம் ஆண்டு சீன நாட்டின் அதிபராக ஜி ஜின்பிங் வந்தபின் ஒட்டுமொத்த நடைமுறையை மாற்றினார்.

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளோடு சீன அதிபர் பயணிக்க சீனாவின் மிகப்பெரிய உள்நாட்டு கார் தயாரிப்பு நிறுவனமான எப்ஏடபிள்யு நிறுவனம் (ர்ழபெஙi) ‘ஹாங்கி எல்-5 ரக காரை சீன அதிபருக்காக பிரத்தேயகமாக உருவாக்கியது.
‘ஹாங்கி’ என்பது சீன மொழியில் ‘சிவப்புக் கொடி’ என்று பொருள்.

எப்ஏடபிள்யு நிறுவனம் கடந்த 1958-ம் ஆண்டு முதல் ‘ஹாங்கி’ ரக சொகுசுக் கார்களைத் தயாரித்து வந்தபோதிலும் இப்போது அதிபர் ஜி ஜின்பிங் பயன்படுத்தும் ‘ஹாங்கி எல் 5 சீர்ஸ்’ கார் சீன அதிபருக்காகவே உருவாக்கபட்டுளது.

காரின் சிறப்பம்சங்கள்:

1. சீன அதிபர் ஜி ஜின்பிங் பயன்படுத்தும் ‘ஹாங்கி எல்-5’ ரக கார் சீனாவிலேயே மிகவும் விலை உயர்ந்த காராகும். இதன் விலை 5 கோடியே 60 லட்சம் ரூபாய்

2. ‘ஹாங்கி எல் 5’ ரக கார் உருவத்தில் மிகப்பெரியது.

3. இது 3,150 கிலோ எடையும், 20 அடி நீளமும், 2 மீட்டர் அகலம், 1.5 மீட்டர் உயரமும் கொண்டது.

4. தரையில் இருந்து வீல் பேஸ் 3.4 மீ்ட்டர் உயரம் கொண்டது.

5. ‘ஹாங்கி எல் 5’ ரக காரில் 408 குதிரைத்திறன் இன்ஜின், 12 வால்வுகளைக் கொண்டுள்ளது.

7. 6 ஸ்பீட் கியர்பாக்ஸ், அனைத்து சக்கரங்களையும் அதிவேகமாகச் சுற்றவைக்கும் திறனை அளிக்கிறது.

8. 10 வினாடிகளில் 100 கி.மீ. வேகத்தை அடையும் திறன் உள்ளது ‘ஹாங்கி எல் 5’ கார்.

9. இந்த காரில் பெட்ரோல் மற்றும் கேஸ்ஸை நிரப்பமுடியும்.

10. 105 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்கும் ஒருமுறை எரிபொருள் நிரப்பினால், 500 மைல்கள் வரை பயணிக்க முடியும்.

11. காரின் உட்புறம் ரோஸ் உட் பேனல்களால் அலங்கரிக்கப்பட்டு, கிரீம் நிறத்திலான தோலில் செய்யப்பட்ட இருக்கைகளைக் கொண்டது.

12. அதிக வேகத்தில் செயல்படும் ஏசி, செயற்கைக்கோள் தொலைபேசி வசதி இருக்கிறது.

13. அதிவேக தொலைத் தொடர்புக் கருவிகள் பொருத்தப்படுள்ளது.

14. நான்கு கதவுகளும் குண்டு துளைக்காத, எந்த சேதமும் ஏற்படாத விதத்தில் உருவாக்கப்பட்டது.

15. காரின் கண்ணாடியையும் துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்க முடியாத அளவு வலிமையான, பிரத்தேய முறையில் உருவாக்கப்பட்டுள்ளது

16. காரின் ஓரத்தில் சிவப்புக் கொடி சின்னமும் , காரின் பின்புறத்தில் ஒளிரும் சீனாவின் பாரம்பரிய ‘லான்டர்ன்’ விளக்குகள் பொருத்தப்பட்டிருக்கும்.

17. ரோல்ஸ் ராய்ஸ், மெர்சடிஸ் என பல அதிசொகுசு கார்களை விட ‘ ஹாங்கி எல் 5 ‘ அனைத்திலும் சிறப்பான கார் என்று கார் தயாரிக்கும் எப்ஏடபிள்யு நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் சீன அதிபர் பயன்படுத்தும் இவ்வளவு சிறப்பு வாய்ந்த ஹாங்கி எல் 5 காரின் மேலும் சில ரகசியங்களை பாதுகாப்புக் காரணங்களுக்காக கார் நிறுவனம் தெரிவிக்க மறுத்துவிட்டது. தன்னுடைய பாதுகாப்புற்காக சீன அதிபர் பயன்படுத்தும் இவ்வளவு சிறப்புகள் கொண்ட கார் வியக்கவைக்கிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of